Sri Lanka Navy – Official Logo
EVENT NEWS 2026

‘க்ளீன் ஸ்ரீ லங்கா’ தேசியத் திட்டத்தின்கீழ் சதுப்புநிலத் தாவரக் கன்றுகளை நடும் வேலைத்திட்டம்

21 Jul 2026

தீவைச் சுற்றியுள்ள கடற்கரையைப் பாதுகாக்கும் நோக்கில், இலங்கை கடற்படையின் ‘க்ளீன் ஸ்ரீ லங்கா’ என்ற தேசியத் திட்டத்தின் ஒரு பகுதியாக, 2026 ஜூலை 18 ஆம் திகதி லங்காபட்டுன உல்லக்கேனி கடற்கரைப்பகுதியில் சதுப்புநிலக் தாவரக் கன்றுகளை நடும் திட்டம் ஒன்று செயல்படுத்தப்பட்டது.

அதன்படி, கிழக்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படைக் கப்பல் லங்காபட்டுன நிறுவனத்தின் மூலம் நூறு (100) சதுப்புநிலத் தாவரக் கன்றுகள் நடும் நடவடிக்கை, லங்காபட்டுன உல்லக்கேனி கடற்கரைப்பகுதியை மையப்படுத்தி முன்னெடுக்கப்பட்டதுடன், குறித்த கடற்கரைப்பகுதியைப் பாதுகாத்தல் மற்றும் அரிமானத்தைத்டுத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட இந்தச் சதுப்புநிலத் தாவரக் கன்றுகளை நடும் நிகழ்வில் இலங்கை கடற்படைக் கப்பல் லங்காபட்டுன நிறுவனத்தின் கட்டளை அதிகாரி உள்ளிட்ட கடற்படை வீரர்கள் குழுவினர் கலந்துகொண்டனர்.

‘க்ளீன் ஸ்ரீ லங்கா’ தேசிய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும், ஜனாதிபதி பணிக்குழுவின் முதன்மைப் பங்காளியாக இலங்கை கடற்படை, பல சுற்றாடல் நட்பு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றதுடன், இவ்வாறான வேலைத்திட்டங்களின் மூலம் கடல்சார் சுற்றாடல் தொகுதியின் நிலையான தன்மையை எதிர்கால சந்ததியினருக்காக மேலும் பாதுகாத்துக்கொடுப்பதை கடற்படை எதிர்பார்க்கின்றது.

Accessibility Tools