Sri Lanka Navy – Official Logo
EVENT NEWS 2026

கதிர்காம பாத யாத்திரையுடன் இணைந்து சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக கடற்படையின் சமூக சேவை பங்களிப்பு

11 Jul 2026

குமண தேசிய பூங்கா வழியாக கதிர்காமத்திற்கு பாத யாத்திரையில் பங்கேற்கும் ஏராளமான பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்காக தேவையான சமூக ஆதரவை வழங்குவதற்காக இலங்கை கடற்படை 2025 ஜூன் 20 முதல் ஒரு சிறப்பு திட்டத்தை செயல்படுத்தியதுடன், இதனைத் தொடர்ந்து, தென்கிழக்கு கடற்படை கட்டளையின் தலைமையில் குமன தேசிய பூங்காவில் ஒரு சிறப்பு சுற்றுச்சூழல் பாதுகாப்பு திட்டத்தை கடற்படையினர் 2025 ஜூன் 25 அன்று தொடங்கினர்.

க்லீன் ஶ்ரீ லங்கா தேசிய திட்டத்தை செயல்படுத்துவதில் முக்கிய பங்காளியான இலங்கை கடற்படை, இயற்கை சூழலின் நிலைத்தன்மையை உறுதி செய்வதற்காக சுற்றுச்சூழல் பாதுகாப்பு திட்டங்களுக்கு தொடர்ந்து பங்களித்து வருகிறது. அதன்படி அதன்படி, குமண தேசிய பூங்கா வழியாக கதிர்காம நடைப்பயண பாத யாத்திரையுடன் இணைந்து, இயற்கை சுற்றுச்சூழல் அமைப்பின் நிலையான உயிர்வாழ்விற்காக பூங்கா நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து இந்த சிறப்பு சுற்றுச்சூழல் பாதுகாப்பு திட்டம் தொடங்கப்பட்டது.

தென்கிழக்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் மஹாநாக நிறுவனம், வன பாதுகாப்புத் துறையுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட இந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு திட்டத்தின் மூலம், கடற்படையினரால் குமண தேசிய வன பூங்காவில் கொட்டப்பட்டிருந்த உக்காத கழிவுகளை சேகரித்து, அவற்றை அகற்றி, சுற்றுச்சூழல் அமைப்பின் நிலைத்தன்மைக்கு தீங்கு விளைவிக்காமல் முறையாக அப்புறப்படுத்தப்பட்டது.

மேலும், இந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு திட்டத்தின் மூலம், பாரம்பரியமான கதிர்காம பாத யாத்திரையில் பங்கேற்கும் பக்தர்களிடையே, கடற்படையினர் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வையும் வழங்கினர்.

Accessibility Tools