தீவை வந்தடைந்த 'INS AIRAVAT' கப்பல் செயல்பாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்த பின்னர் தீவிலிருந்து புறப்பட்டது
செயல்பாட்டுத் தேவைகளை நிறைவேற்றுவதற்காக இந்தியக் கடற்படைக் கப்பலான 'INS AIRAVAT' 2026 ஜூன் 01 ஆம் திகதி தீவை வந்தடைந்துடன், குறித்த கப்பல் தேவைகளைப் பூர்த்தி செய்த பின்னர் 2026 ஜூன் 04 ஆம் திகதி தீவிலிருந்து புறப்படுகிறது. இலங்கை கடற்படையினர், கடற்படை மரபுகளின்படி கொழும்பு துறைமுகத்தில் கப்பலுக்கு பிரியாவிடை அளித்தனர்.
மேற்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில், 'INS AIRAVAT' நீர்மூழ்கிக் கப்பலின் கட்டளை அதிகாரி, மேற்கு கடற்படை கட்டளையின் தளபதி மற்றும் கடற்படை கட்டளையின் கொடி அதிகாரி ஆகியோருக்கு இடையே ஒரு உத்தியோகபூர்வ சந்திப்பு நடைபெற்றதுடன், இரு நாடுகளின் கடற்படைகளுக்கு இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர உறவுகளை மேலும் மேம்படுத்துவது குறித்து இரு தரப்பினரும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
இந்தியக் கடற்படை, இலங்கைக் கடற்படைக்கு நான்கு புதிய Pneumatic Fenders பழுதுபார்க்கும் கருவிகளையும் நன்கொடையாக வழங்கியது. இந்நிகழ்ச்சியில் ‘INS AIRAVAT’ நீர்மூழ்கிக் கப்பலின் கட்டளை அதிகாரி, மேற்கு கடற்படைக் கட்டளைத் தளபதி மற்றும் ஒரு தூதுக்குழுவினர் கலந்துகொண்டனர்.
கப்பல் தீவில் தங்கியிருந்தபோது, அதன் குழுவினர் இலங்கை கடற்படையால் ஏற்பாடு செய்யப்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றதுடன், இலங்கை கடற்படை உறுப்பினர்களுக்கும் கப்பலைச் சுற்றிப் பார்க்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது. மேலும், கப்பலின் குழுவினர் நாட்டிலுள்ள பல சுவாரஸ்யமான இடங்களையும் பார்வையிட்டனர்.