Sri Lanka Navy – Official Logo
EVENT NEWS 2026

முப்படை ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில், இலங்கை கடற்படை, விமானப்படை வீரர்களுக்கு நீரில் உயிர்வாழும் பயிற்சிகளை வழங்குகிறது

28 Jun 2026

முப்படை ஒத்துழைப்பு மற்றும் கூட்டு நடவடிக்கைகளுக்கான தயார்நிலையை மேம்படுத்தும் நோக்கில், இலங்கை கடற்படையின் சிறப்பு படகுப் படைப்பிரிவினால் (Special Boat Squadron - SBS), இலங்கை விமானப்படை விமானப் பணியாளர்களுக்காக ஒழுங்கமைக்கப்பட்ட 'நீரில் உயிர்வாழும் பயிற்சிக் கற்கைநெறி' (Water Survival Training Course), 2026 ஜூன் 15 முதல் 25 வரை திருகோணமலையில் உள்ள சிறப்பு படகுப் படைப்பிரிவு பயிற்சிக் கல்லூரியில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

அதன்படி, 10 நாட்கள் நடைபெற்ற இந்தப் பயிற்நெறிக்காக விமானப் படை அதிகாரிகள் மற்றும் ஏனைய பதினெட்டு (18) பேர் கலந்துகொண்டனர். இந்தப் பயிற்சியின் போது; உயிர் காக்கும் நீச்சல் முறைகள், நீரில் மிதந்திருக்கும் முறைகள், நீரில் மூழ்கும் அபாயங்களிலிருந்து தப்பிக்கும் முறைகள், விமானமொன்று நீரில் அவசரகாலத் தரையிறக்கத்தைச் செய்யும்போது (Aircraft Ditching) மேற்கொள்ள வேண்டிய பயிற்சிகள், நீரில் காயமடைந்தவர்களைக் காப்பாற்றுதல், முகாமைத்துவம் மற்றும் அவசரகாலச் செயற்பாடுகள் குறித்த அத்தியாவசிய அறிவு மற்றும் செய்முறைத் திறன்கள் ஆகியன பங்கேற்பாளர்களுக்குப் பயிற்றுவிக்கப்பட்டன.

அத்துடன், இந்தப் பயிற்நெறியின் இறுதி களப் பயிற்சியின் (Final Training Exercise - FTX) மூலம், நீரினால் ஏற்படும் அவசரநிலைகளை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்குத் தேவையான செய்முறைத் திறன்கள், சுய நம்பிக்கை, முடிவெடுக்கும் திறன் மற்றும் மன உறுதி ஆகியவற்றை மேலும் வளர்த்துக்கொள்ள அவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.

இந்தப் பயிற்நெறியின் நிறைவு விழா, 2026 ஜூன் 25 ஆம் திகதி விசேட படகுப் படைப் பிரிவின் (Special Boat Squadron) பயிற்சிப் பாடசாலையின் பயிற்சித் தளபதி கொமாண்டர் திஸ்ஸ குமார அவர்களின் தலைமையில் அப் பாடசாலையில் நடைபெற்றது. இதன்போது, பயிற்நெறியை வெற்றிகரமாக நிறைவு செய்த விமானப் படை அதிகாரிகள் மற்றும் ஏனைய அங்கத்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

Accessibility Tools