Sri Lanka Navy – Official Logo
EVENT NEWS 2026

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு இலங்கை கடற்படையினரால் தீவெங்கும் மரநடுகை நிகழ்ச்சித் தொடர் ஒன்று முன்னெடுக்கப்பட்டது

10 Jun 2026

2026 ஜூன் 05 ஆம் தேதி அனுசரிக்கப்பட்ட உலக சுற்றுச்சூழல் தினத்தின் ‘Urgent Climate Action’ என்ற உலகளாவிய கருப்பொருளுக்கு அமைவாக, ‘காலநிலை மாற்றத்தின் தாக்கங்களை குறைப்பதற்கு செயற்படுவோம்’ என்ற தேசிய கருப்பொருளை முன்னிறுத்தி, இலங்கை கடற்படையின் அனைத்து கட்டளைகளையும் உள்ளடக்கிய வகையில் பல சுற்றுச்சூழல் நட்பு நிகழ்ச்சித் திட்டங்கள் ஒழுங்குபடுத்தப்பட்டன.

இந்த நிகழ்ச்சித் தொடரின் ஒரு பகுதியாக மரநடுகைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அதன் கீழ், தீவின் கடற்கரை, கலப்பு நீர்நிலைகள் மற்றும் நிலப்பரப்புப் பகுதிகளில் அந்தந்த சூழலமைப்புகளுக்கு ஏற்ற மரக்கன்றுகள் நட்டதுடன், கடல்சார் சுற்றுச்சூழல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. இந்நிகழ்ச்சிகள் கடற்படைத் தளபதியின் ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதலின் கீழ், பிராந்திய கட்டளைத் தளபதிகளின் மேற்பார்வையில் நடைமுறைப்படுத்தப்பட்டன.

மேலும், ‘க்ளீன் ஶ்ரீ லங்கா' தேசிய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஜனாதிபதி செயலணியின் முக்கிய பங்காளராக செயல்பட்டு வரும் இலங்கை கடற்படை, இத்தகைய பல சுற்றுச்சூழல் நட்பு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. இந்த விசேட மரநடுகை நிகழ்ச்சியின் மூலம், நாட்டின் ‘நீல- ஹரித’ கடல்சார் சூழலை உருவாக்கும் நோக்கில் கடல்சார் வளங்களைப் பாதுகாத்தல், கடற்கரைச் சூழலைப் பேணுதல் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை மேம்படுத்துதல் ஆகியவற்றில் இலங்கை கடற்படையின் அர்ப்பணிப்பு மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Accessibility Tools