Sri Lanka Navy – Official Logo
SPORT NEWS 2026

தேசிய ஆடவர் இரட்டை வெளியேற்ற Baseball தொடரின் சாம்பியன் பட்டத்தை கடற்படை கைப்பற்றியது

20 Jul 2026

அமெரிக்காவின் 250 ஆவது சுதந்திரக் கொண்டாட்டத்திற்கு அமைவாக, அமெரிக்கத் தூதரகம் இலங்கை Baseball சம்மேளனத்துடன் இணைந்து ஏற்பாடு செய்த தேசிய ஆடவர் இரட்டை வெளியேற்ற பேஸ்பால் தொடரின் இறுதிப் போட்டி 2026 ஜூலை 19 ஆம் திகதி தியகம, இலங்கை - ஜப்பான் நட்புறவு Baseball மைதானத்தில் நடைபெற்றதுடன், அதில் கடற்படை ஆடவர் பேஸ்பால் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

அதற்கமைய, முப்படைகள் உட்பட நாட்டின் பல முன்னணி பேஸ்பால் அணிகளின் பங்கேற்புடன் 2026 மார்ச் 28 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த தேசிய ஆடவர் இரட்டை வெளியேற்ற பேஸ்பால் தொடரில், இருபத்தொன்று (21) அணிகளை வீழ்த்தி, கடற்படை ஆடவர் Baseball அணி தோல்வியின்றி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. அதில், இலங்கை இராணுவத்துடன் நடைபெற்ற இறுதிப் போட்டியில் 14 – 11 என புள்ளிகளைப் பெற்று கடற்படை ஆடவர் பேஸ்பால் அணி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

போட்டியின் சிறந்த ஆட்டநாயகன் மற்றும் சிறந்த மட்டையாளர் ஆகிய விருதுகளை கடற்படை வீரர் ஏபி ஐ.பி.டி.எம். விக்கிரமசிங்க வென்றதுடன், போட்டியின் மிகவும் மதிப்புமிக்க ஆட்டநாயகன் விருதை கடற்படை வீரர் ஆர்டினரி சீமேன் ஏ.எஸ்.எம். குணவர்தன வென்றெடுத்தார்.

மேலும், இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர் திருமதி Lee Ann Ross, கடற்படை விளையாட்டுப் பணிப்பாளர் கொமடோர் இந்திக எதிரிசிங்க, சிரேஷ்ட அதிகாரிகள் குழு மற்றும் இராணுவம், கடற்படைப் பணியாளர்கள் குழு ஆகியோர் கோப்பை வழங்கும் விழாவில் கலந்துகொண்டனர்.

Accessibility Tools