Sri Lanka Navy – Official Logo

சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட நறுமணப் பொருட்கள் பத்தலங்குண்டுவயில் கைப்பற்றப்பட்டன

24 Aug 2026

இலங்கை கடற்படையினரால் கற்பிட்டி, பத்தலங்குண்டுவ, சின்ன குண்டு கடற்கரைப் பகுதியில் 2026 ஆகஸ்ட் 23 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட உலர்ந்த இஞ்சி மற்றும் ஏலக்காய் தோல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படைக் கப்பலான 'விஜய' நிறுவனத்தினால் பத்தலங்குண்டுவ சின்ன குண்டு கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இந்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, அப்பகுதியில் காணப்பட்ட சந்தேகத்திற்கிடமான 13 உரைகள் சோதனையிடப்பட்டன. அதில் 264 கிலோகிராம் உலர்ந்த இஞ்சி மற்றும் 69 கிலோகிராம் ஏலக்காய் தோல்கள் என்பன கைப்பற்றப்பட்டன.

மேலும், இந்த நடவடிக்கையின் மூலம் கைப்பற்றப்பட்ட நறுமணப் பொருட்கள், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கற்பிட்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

Accessibility Tools