Sri Lanka Navy – Official Logo

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் கடற்படையினரால் 28 பேர் சட்டத்தின் முன்னிலையில்

16 Jul 2026

இலங்கை கடற்படையினால், 2026 ஜூன் 01 முதல் 15 வரையிலான காலப்பகுதியில், நாட்டின் கடல் பிராந்தியத்தை உள்ளடக்கிய வகையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் மூலம் சட்டவிரோத முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட இருபத்தெட்டு (28) நபர்களுடன், பன்னிரண்டு (12) டிங்கி படகுகள் மற்றும் நான்கு (04) உழவு இயந்திரங்கள் மற்றும் ஒரு (01) வேன் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.

அதன்படி, திருகோணமலை மாவடி ஓடை, கதிரவேளி, நயாறு, பிளாக் முனை, யாழ்ப்பாணம் வெற்றிலைக்கேணி மற்றும் கட்டைக்காடு ஆகிய கடற்கரை மற்றும் கடல்சார் பகுதிகளை உள்ளடக்கி, கிழக்கு மற்றும் வடக்கு கடற்படைக் கட்டளைகளினால் மேற்கொள்ளப்பட்ட இச்செய்மதித்நடவடிக்கைகளின் போது சட்டவிரோத முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட நபர்களுடன், டிங்கி படகுகள் மற்றும் உழவு இயந்திரங்கள் மற்றும் வேன் என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், கொட்பே, வாழைச்சேனை ஆகிய கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்கள அலுவலகங்களிலும், மருதங்கேணி காவல் நிலையத்திலும் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

Accessibility Tools