Sri Lanka Navy – Official Logo
SPORT NEWS 2026

‘கட்டளைகளுக்கிடையிலான கைப்பந்து போட்டித் தொடர் - 2026’ வெற்றிகரமாக நிறைவடைந்தது

14 Aug 2026

‘கட்டளைகளுக்கிடையிலான கைப்பந்து போட்டித் தொடர் - 2026’ இலங்கை கடற்படை கப்பல் நிபுண நிறுவனத்தின் விளையாட்டு மைதானத்தில், 2026 ஆகஸ்ட் மாதம் 10 முதல் 13 ஆம் திகதி வரை நடைபெற்றதுடன், தெற்கு கடற்படை கட்டளையின் துணைத் தளபதி கொமடோர் அருண வீரசிங்க அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட இப்போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில், கப்பற்படை கட்டளையும் பயிற்சி கடற்படை கட்டளையும் முறையே ஆண்கள் மற்றும் பெண்களுக்கான சாம்பியன்ஷிப் பட்டங்களை வென்றெடுத்தன.

மேலும், இப்போட்டித்தொடரின் சிறந்த தாக்குதல் ஆட்டக்காரராக கிழக்கு கடற்படை கட்டளையை பிரதிநிதித்துவப்படுத்திய லீடிங் சீமன் அனுருத்தவும், சிறந்த பெண் தாக்குதல் ஆட்டக்காரராக பயிற்சி கட்டளையை பிரதிநிதித்துவப்படுத்திய வுமன் லீடிங் கொம் ஜிபிஎச்எல் கமகேவும், சிறந்த வீரருக்கான விருதை கப்பற்படை கட்டளையை பிரதிநிதித்துவப்படுத்திய லீடிங் பிசிகள் இன்ஸ்டிரக்டர் ஜிஏஆர்பி ஜெயகொடியும், சிறந்த வீராங்கனையாக பயிற்சி கட்டளையை பிரதிநிதித்துவப்படுத்திய ஓடினரி சீமன் பிசிகள் இன்ஸ்டிரக்டர் டிஏகேஎன் குமாரியும், சிறந்த வலைக்காப்பாளராக கப்பற்படை கட்டளையை பிரதிநிதித்துவப்படுத்திய லெப்டினன்ட் கமாண்டர் ஈஎச் அங்கம்மனவும், சிறந்த பெண் வலைக்காப்பாளராக பயிற்சி கட்டளையை பிரதிநிதித்துவப்படுத்திய ஏபல் பிசிகள் இன்ஸ்டிரக்டர் கேயுஎன் மதுவன்ஷியும் அங்கு கோப்பைகளை வென்றெடுத்தனர்.

இந்நிகழ்வில் தெற்கு கடற்படை கட்டளையின் திணைக்களத் தலைவர்கள், இலங்கை கடற்படைக் கப்பல் நிபுண நிறுவனத்தின் கட்டளை அதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் கடற்படை வீரர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Accessibility Tools