Sri Lanka Navy – Official Logo
SPORT NEWS 2026

10 ஆவது தெற்காசிய கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய கடற்படையினர் ஐந்து வெண்கலப் பதக்கங்களை வென்றனர்

22 Jul 2026

வங்கதேச கராத்தே சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 10 ஆவது சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட தெற்காசிய கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி - 2026, 2026 ஜூலை 18 மற்றும் 19 ஆகிய திகதிகளில் வங்கதேசத்தின் டாக்கா நகரில் அமைந்துள்ள ‘Shaheed Shorawardi’ உள்ளக விளையாட்டு அரங்கில் கோலாகலமாக நடைபெற்றது.

தெற்காசிய பிராந்தியத்தைச் சேர்ந்த ஏழு (07) நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி பெருமளவிலான விளையாட்டு வீரர்கள் பங்கேற்ற இப்போட்டியில், இலங்கை கடற்படையைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஆண் மற்றும் பெண் வீரர்கள் மூவர் (03) கலந்துகொண்டதுடன், அவர்களால் ஐந்து (05) வெண்கலப் பதக்கங்களை வெல்ல முடிந்தது.

இதன்போது, தனிநபர் குமிதே 50 கிலோகிராமிற்கு உட்பட்ட எடைப் பிரிவைப் பிரதிநிதித்துவப்படுத்திய லீடிங் சீமன் ஏடிஎன்எஸ் ஆரியரத்ன வெண்கலப் பதக்கமொன்றை வென்றார். அத்துடன், தனிநபர் குமிதே 61 கிலோகிராமிற்கு உட்பட்ட எடைப் பிரிவு மற்றும் குழு குமிதே நிகழ்வைப் பிரதிநிதித்துவப்படுத்திய ஏபல் சீமன் (பெண்) பிஎல்எம் நெத்மினி அவ்விரு நிகழ்வுகளிலும் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றார். மேலும், தனிநபர் குமிதே 68 கிலோகிராமிற்கு உட்பட்ட எடைப் பிரிவு மற்றும் குழு குமிதே நிகழ்வைப் பிரதிநிதித்துவப்படுத்திய லீடிங் சீமன் (பெண்) கேஏசி துலாஞ்சலியால் அவ்விரு நிகழ்வுகளிலுமிருந்து இரண்டு வெண்கலப் பதக்கங்களை வெல்ல முடிந்தது.

இவ்வெற்றிகளின் மூலம் இலங்கை கடற்படையினரின் விளையாட்டுத் திறமைகள் சர்வதேசப் போட்டித் களத்தில் மீண்டும் ஒருமுறை வெளிப்பட்டதுடன், இலங்கைக்கும் கடற்படைக்கும் பெருமை சேர்க்கவும் இவ்வீரர்களால் முடிந்தது. இவ் வெற்றியானது கடற்படையில் கராத்தே விளையாட்டை மேலும் மேம்படுத்துவதற்கும் சர்வதேச மட்டத்திலான திறமைமிக்க வீரர்களை உருவாக்குவதற்கும் முன்னெடுக்கப்படும் தொடர்ச்சியான திட்டங்களின் வெற்றியையும் தெளிவாகப் பிரதிபலிக்கிறது.

Accessibility Tools